
கோலாலம்பூர், பிப்ரவரி-21- The Gardens Midvalley பேரங்காடி மற்றும் KL Eco City அருகேயுள்ள ஆற்றில் நேற்று மாலை 3 மீட்டர் நீள முதலை தென்பட்டதால் மாநகரவாசிகள் அதிர்ச்சியடைந்தனர்.
சமூக ஊடகங்களில் அது வைரலானதை அடுத்து, அவ்விரு வணிக வளாகங்களையும் இணைக்கும் பாலத்தில் ஏராளமானோர் கூடினர்.
கிள்ளான் ஆற்றில் குறிப்பாக சம்பவ இடத்தில் முதலைகள் நடமாட்டம் மிகவும் அரிதாகும்.
இந்நிலையில் பொது தற்காப்புப் படையான APM வீரர்கள் அங்கு நிலவரத்தைத் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
அவர்களுடன் போலீஸ், தீயணைப்பு-மீட்புத் துறை, PERHILITAN எனப்படும் வனவிலங்கு மற்றும் தேசியப் பூங்காக்கள் துறையினரும் அங்கு முகாமிட்டுள்ளனர்.
ஆற்றில் படகை இறக்கி முதலையைப் பிடிக்க முடிவுச் செய்யப்பட்டுள்ளது; பொறியும் பொருத்தப்படுமென பிரிக்ஃபீல்ட்ஸ் போலீஸ் கூறியது.
முதலை பிடிபடும் வரை அப்பகுதியிலிருந்து சற்று தள்ளியே இருக்குமாறு பொது மக்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.