Latest
The Mines பேரங்காடியில் புகுந்த வெள்ளம்; கடைகள் அடைப்பு

ஸ்ரீ கெம்பாங்கான், நவம்பர்-16,
The Mines பேரங்காடியில் புகுந்த வெள்ளம்; கடைகள் அடைப்புநேற்று பெய்த கனமழையைத் தொடர்ந்து, சிலாங்கூர், ஸ்ரீ கெம்பாங்கானில் உள்ள The Mines பேரங்காடி வெள்ளத்தில் மூழ்கியது.
பேரங்காடியின் தரை தளத்தில் உள்ள பல கடைகளில் வெள்ள நீர் புகுந்தது, சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட வைரல் வீடியோக்களில் தெரிந்தது.
வெள்ளத்தால் பல வளாகங்கள் தற்காலிகமாக மூடப்பட்டன.
இதுவரை, சம்பவத்திற்கான காரணம் அல்லது ஏற்பட்ட சேதத்தின் அளவு குறித்து The Mines நிர்வாகம் இன்னும் எந்த அதிகாரப்பூர்வ அறிக்கையையும் வெளியிடவில்லை.
இந்நிலையில், இதுபோன்ற சம்பவம் மீண்டும் நிகழாமல் தடுக்க பேரங்காடி நிர்வாகமும் அதிகாரிகளும் உடனடியாக வடிகால் அமைப்பை ஆய்வு செய்யுமாறு வலைத்தளவாசிகள் வலியுறுத்தினர்.



