
கோலாலம்பூர், ஜூலை 8 – இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பாவச் செயல்களில் ஈடுபட்டதோடு , பேய் மற்றும் போமோ சடங்குகளில் பங்கேற்று , பலதெய்வ வழிபாட்டைப் பின்பற்றியது தொடர்பில் டத்தின் ஸ்ரீ ரோஸ்மா மன்சோரை அவதூறு செய்ததற்காக, அவருக்கு டிக்டாக் பயனர் ஒருவர் 100,000 ரிங்கிட் இழப்பீடு செலுத்த வேண்டும் என்று உயர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.
டிக்டாக் கணக்கின் உரிமையாளரான கூ முஹமட் ஹில்மி கூ டின் ( Ku Muhammad Hilmie Ku Din) என்பவர் மீது அவதூறு வழக்குத் தொடுத்ததற்காக ரோஸ்மா தனது கோரிக்கையை வெற்றிகரமாக நிரூபித்ததைக் கண்டறிந்த உயர் நீதிமன்ற நீதிபதி டத்தோ அகமட் ஷாரிர் , இந்தத் இழப்பீட்டுத் தொகையை நிர்ணயித்தார்.
“இந்த நீதிமன்றம் 100,000 ரிங்கிட் இழப்பீடு தொகையில் உலகளாவிய தீர்ப்புக்கான நியாயமான மற்றும் விழுக்காடு மதிப்பீடாகக் கருதுகிறது என்று ரோஸ்மாவின் அவதூறு வழக்கில் இழப்பீடுகளை மதிப்பிடுவது குறித்த தனது தீர்ப்பில் நீதிபதி அகமட் ஷாரிர் சுட்டிக்காட்டினார்.