TNB : டெங்கிலில் கட்டப்பட்ட கோவில், விளம்பர பலகையின் மின்சாரத்தை பயன்படுத்தியுள்ளது

செப்பாங், ஜனவரி-10,
செப்பாங் டெங்கிலில் கட்டப்பட்டிருக்குக்கும்
ஒரு கோவில், அருகிலுள்ள விளம்பரப் பலகையின் மின்சாரத்தை பயன்படுத்துவதாக சமூக ஊடகங்களில் தவல்கள் வைரலாகியுள்ள நிலையில், TNB இது குறித்து விளக்கமளித்துள்ளது.
அந்தக் கோவில் அமைந்துள்ள இடம் தனியார் நிலமாகும்.
கோவிலுக்கு தனிப்பட்ட மின்சார இணைப்பு இல்லாத நிலையில், அருகிலுள்ள விளம்பர பலகை நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட சட்டபூர்வ மின்சாரம், கோவிலில் பயன்படுத்தப்பட்டிருப்பது உறுதிச் செய்யப்பட்டுள்ளது.
மின்சாரம் சட்டபூர்வமாக விளம்பர பலகைக்கே வழங்கப்பட்டுள்ளதால், அது அனுமதியின்றி கோவிலுக்குப் பயன்படுத்தப்படுவது குறித்து பாதுகாப்பு கோணத்தில் தொடர்ந்து கண்காணிப்பில் இருப்பதாகவும் TNB கூறியது.
எனினும் அடுத்தக் கட்ட நடவடிக்கைகள் குறித்த தகவலை TNB இன்னும் வெளியிடவில்லை.
முன்னதாக, அந்தத் தனியார் நிலத்தின் உரிமையாளர், 2001-ஆம் ஆண்டில் விளம்பர பலகை அமைப்பதற்காக அந்நிலத்தை தாம் வாங்கியதாகவும், தாம் அப்பக்கமே செல்லாத இந்த 20 ஆண்டுகளில் அங்கு கோவில் அங்கு கட்டப்பட்ட அதிர்ச்சி தகவல் அண்மையில்தான் தமக்குத் தெரிய வந்ததாகவும் கூறியிருந்தார்.
ஒரு வாரத்தில் இடத்தை காலி செய்யாவிட்டால் கோயில் இடிக்கப்படும் எனவும் சொல்லியிருந்தார்.
இதனிடையே சிலாங்கூர் அரசும், சட்ட விதிமுறைகளுக்குக் கட்டுப்படுமாறு கோயில் நிர்வாகத்தை அறிவுறுத்தியுள்ளது.



