கோலாலம்பூர், நவம்பர்-23, கோலாலம்பூர் Tun Razak Exchange (TRX) வணிக வளாகத்தில் போலீவூட் சூப்பர் ஸ்டார் ஷாருக் கானின் திடீர் பிரவேசம் வருகையாளர்களை ஆச்சரியப்படுத்தியது.
துபாயைத் தளமாகக் கொண்ட Bin Zayed International (BZI) நிறுவனத்தின் கிளைத் திறப்பு விழாவுக்காக அவர் மலேசியாவுக்கு குறுகியக் கால வருகை மேற்கொண்டார்.
மலேசியாவிலும் ஏராளமான இரசிகர்களைக் கொண்ட ஷாருக் கானின் வருகையால் அந்நிகழ்ச்சிக் களைக் கட்டியது.
சில ஆண்டுகள் கழித்து மலேசியாவுக்கு திரும்பி வந்து அனைவரையும் சந்திப்பது மகிழ்ச்சியென 59 வயது ஷாருக் சொன்னார்.
உலக முதலீட்டு நிறுவனமான BZI, கோலாலம்பூர் TRX-சில் திறந்திருக்கும் கிளையின் மூலம் தென்கிழக்காசியச் சந்தைக்குள் அடியெடுத்து வைத்துள்ளது.