Latestமலேசியா

UKM இந்தியர் மாணவர் பிரதிநிதித்துவ சபை & பல்கலைக்கழக கபடி கழக ஏற்பாட்டில் மாவீரன் 2.0 விளையாட்டுப் போட்டி

மலேசிய தேசிய பல்கலைக்கழக, இந்திய மாணவர் பிரதிநிதித்துவச்சபையும் , UKM பல்கலைக்கழக கபடி கழகமும் இணைந்து மாவீரன் 2.0 என்ற விளையாட்டு போட்டியை ஏற்பாடு செய்துள்ளனர். இந்த போட்டியில் கபடி, காற்பந்து மற்றும் பூப்பந்து ஆகியவையும் இடம்பெற்றுள்ளன.

16 பால்கலைக்கழகங்களைச் சேர்ந்த 900க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் இதில் கலந்துகொள்வதற்கு பதிவு செய்துள்ளனர்.

2ஆவது ஆண்டாக நடைபெறும் மாவீரன் விளையாட்டுப் போட்டி கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த முறை இன்னும் பெரிதாகவும் சிறப்பாகவும் நடைபெற உள்ளது.

UKM பல்கலைக்கழக இந்திய மாணவர்களுக்குப் பூப்பந்து மற்றும் காற்பந்து போட்டிகள் நடைபெறுவது இதுவே முதல் முறையாகும்.

7 மாத திட்டமிடலுக்குப் பிறகு, இந்த வாரம் Dewan Tun Abdullah Mohd Sallehவில் கபடி போட்டியும் அதன் நிறைவு விழாவும் நடைபெறும்.

நாட்டிலுள்ள பல்கலைக்கழக மாணவர்களிடையே விளையாட்டுத்துறையை மேம்படுத்துவது மற்றும் இதன்வழி உயர்க்கல்வி நிலைய மாணவர்களுக்கிடையிலான நட்புறவு மற்றும் புரிந்துணர்வை ஏற்படுத்திக்கொள்ளும் நோக்கத்தில் இந்த போட்டி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இன்னும் 6 நாட்கள் மட்டுமே எஞ்சியிருக்கும் நிலையில் ஒவ்வொரு பல்கலைக்கழகமும் மாவீரன் 2.0 போட்டியில் கலந்துகொள்வதற்கும் வெற்றி பெறுவதற்காக தங்களது விளையாட்டாளர்களை தயார்ப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபடுவார்கள் என்பதில் சந்தேகமில்லை.

அதே வேளையில் மாவீரன் 2.0 விளையாட்டுப் போட்டிக்காக ஸ்போன்சர்கள் அல்லது ஏற்பாட்டு ஆதரவாளர்களையும் தேசிய பல்கலைக்கழக இந்தியர் பிரதிநிதித்துவ சபை எதிர்பார்க்கிறது.

இது தொடர்பான மேல் விவரங்களுக்கு 017-770 2526 Yogendran, 011‑6171 2497 Muhendra, 012-601 4996 Kashvin ஆகியோரை தொடர்பு கொள்ளலாம்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!