Latestமலேசியா

UKM நிலத்தில் அனுமதியின்றி கட்டப்பட்ட கோயில்; சிலாங்கூர் அரசின் முடிவுக்காக காத்திருக்கும் பல்கலைக்கழக நிர்வாகம்

பாங்கி, மார்ச்-31-UKM எனப்படும் மலேசியத் தேசியப் பல்கலைக்கழகத்திற்குச் சொந்தமான நிலத்தில் அனுமதியின்றி கட்டப்பட்ட கோவில் தொடர்பான விவகாரம் தற்போது கவனம் ஈர்த்துள்ளது.

இது குறித்து ஏற்கனவே சிலாங்கூர் மாநில அரசுடன் ஆலோசனை நடைபெற்றதாகவும், தற்போது சிலாங்கூர் மத நல்லிணக்கக் குழுவான Limas-சின் கவனத்திற்கு கொண்டுச் செல்லப்பட்டுள்ளதாகவும், UKM நிர்வாகம் அறிக்கையொன்றில் கூறியது.

இந்நிலையில், அதிகாரப்பூர்வ முடிவு வரும் வரை UKM தன்னிச்சையாக எந்த நடவடிக்கையும் எடுக்காது எனவும், அனைத்து தரப்பினரும் அமைதியாக இருந்து யூகங்களைத் தவிர்க்க வேண்டும் எனவும் அது வலியுறுத்தியது.

முன்கூட்டியே முடிவுகளை எடுப்பது குழப்பத்தையும் பதற்றத்தையும் ஏற்படுத்தும் அபாயம் உள்ளதாக அது எச்சரித்தது.

எது எப்படி இருந்தாலும், கவனமாகவும், சினமூட்டும் வகையில் அல்லாமலும் இந்த பிரச்னை விரைவில் தீர்க்கப்படும் என அது நம்பிக்கைத் தெரிவித்தது.

இது தொடர்பாக, சிலாங்கூர் ஆட்சிக் குழு உறுப்பினர் வீ. பாப்பாராயுடுவை வணக்கம் மலேசியா தொடர்புகொண்டு கேட்டபோது, இவ்விவகாரம் தற்போது பரிசீலனையில் இருப்பதாகவும், UKM நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தியப் பிறகு ஒரு தீர்வு காணப்படும் என்றும் கூறியுள்ளார்.

அதே சமயத்தில், கோயில்களுக்கான நிலங்களைப் பெற்றுத் தருவது சாதாரணம விஷயம் அல்ல; அந்த அடிப்படையில் கோவில் நிர்வாகங்கள் இந்த சிரமத்தை நன்கு புரிந்துகொண்டு, தங்களுக்கு முழு ஒத்துழைப்பு தருமாறும் அவர் கேட்டுக் கொண்டார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!