Latestமலேசியா

UPU கிடைக்கவில்லையா? கவலை வேண்டாம், ஏய்ம்ஸ்ட் நேர்முகத் தேர்வில் கலந்துகொள்ளுங்கள்

கோலாலம்பூர், செப்டம்பர்-5 – அரசாங்கப் பல்கலைக்கழக நுழைவுக்கான UPU முடிவுகள் இன்று வெளியாகியுள்ளன.

இடம் கிடைத்தவர்களுக்கு வாழ்த்துகள்; கிடைக்காதவர்கள் மனம் தளர வேண்டாம்.

உங்களுக்காக தனது கதவுகளைத் திறக்கிறது ம.இ.காவின் ஏய்ம்ஸ்ட் பல்கலைக்கழம்.

வருகின்ற செப்டம்பர் 13, 14-ஆம் ஆம் தேதிகளில் கெடா campus வளாகத்திலும் கோலாலம்பூர் ஏய்ம்ஸ்ட் அலுவலகத்திலும் மாணவர் சேர்க்கைக்கான நேர்முகத் தேர்வு நடைபெறுகிறது.

நேரில் வர இயலாதவர்கள் இயங்கலை வயிலாகவும் இந்த நேர்முகத் தேர்வில் பங்கேற்கலாம்.

STPM, மெட்ரிகுலேஷன் அல்லது அரசாங்கக் கல்லூரிகளில் foundation படிப்பை முடித்த மாணவர்கள் இதில் பங்கேற்கலாம்.

குறிப்பாக MBBS மருத்துவம், பல் மருத்துவம், மருந்தியல் படிப்பு உள்ளிட்ட இளங்கலை பட்டப்படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

சரியாக ஒரு மாதத்தில் அக்டோபர் 6-ஆம் தேதி மாணவர் சேர்க்கை தொடங்குவதால், இந்த அரிய வாய்ப்பை நழுவ விடாமல் நேர்முகத் தேர்வில் பங்கேற்குமாறு மாணவர்களுக்கு ஏய்ம்ஸ்ட் அழைப்பு விடுத்துள்ளது.

மேற்படிப்புக்கான நேர்முகத் தேர்வோடு, கூடுதலாக கல்வி உபகாரச்சம்பளத்திற்கும் நேர்முகத்தேர்வு நடத்தப்படுகிறது.

தகுதிப் பெற்ற மாணவர்கள் இதன் மூலம் உபகாரச் சம்பளத்தோடு தான் ஏய்ம்ஸ்டில் காலடி வைப்பர்.

இது பெற்றோரின் சுமையைப் பெரிதும் குறைக்கும் என்பது திண்ணம்.

நேர்முகத் தேர்வுக்கு நேரில் வருவோர், அதோடு நின்று விடாமல், ஏய்ம்ஸ்டில் வழங்கப்படும் பட்டப்படிப்புகள் குறித்து துறை சார் நிபுணர்களுடன் கலந்துரையாடலாம்; campus வசதிகளும் சுற்றிக் காட்டப்படும்.

எனவே அரசாங்க உயர் கல்விக் கூடங்களில் இணையும் வாய்ப்பு கிடைக்கவில்லையே என சோர்வடையாமல், தரத்திலும் வசதியிலும் எந்த விதத்திலும் குறையாத ஏய்ம்ஸ்ட் பல்கலைக்கழகத்தின் இந்த அரிய வாய்ப்பை மாணவகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

உங்களின் ஒளிமயமான எதிர்காலத்திற்கு உத்தரவாதம் வழங்க ஏய்ம்ஸ்ட் தயாராக உள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!