
கோலாலம்பூர், ஆகஸ்ட் 11 – மலேசியர்களின் கல்வித் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு, ‘ரெசிடென்சி’ அமான் மடானி பகுதியில் Vertical எனப்படும் அடுக்குமாடி பள்ளி ஒன்றை அமைக்க பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் முன்மொழிந்துள்ளார்.
அப்பகுதியில் ஏற்கனவே ஒரு தொடக்கப் பள்ளி இருந்தாலும், மக்கள் தொகை அதிகரிப்பால் கூடுதல் கல்வி வசதிகள் மிகவும் அவசியமாக இருக்கின்றன என்பதனை அன்வார் விளக்கப்படுத்தினார்,
மேம்பாட்டு பகுதியில் ஒரு அடுக்குமாடி பள்ளி அமைக்க வேண்டும் என்றும் மேம்பாலம் மூலம் இணைக்கப்பட்ட குடியிருப்புக்கெதிராக அப்பள்ளி கட்டப்பட வேண்டும் என்றும் பரிந்துரைக்கப்பட்டது.
மேலும், மழலையர் பள்ளி, சூராவ், மருத்துவமனை மற்றும் பாதுகாப்பு மையம் ஆகிய வசதிகளும், பள்ளி கட்டமைப்பின் பகுதியாக மக்களின் வசதிக்காக ஒருங்கிணைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.