Latestஉலகம்மலேசியா

USD 175 பில்லியன் மதிப்பிலான ஏவுகணை பாதுகாப்பு கேடயம்; புதிய திட்டத்தில் ட்ரம்ப்

வாஷிங்டன்- மே 21- நேற்று, அமெரிக்க அதிபர் டோனால்ட் ட்ரம்ப் (Donald Trump), 175 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள கோல்டன் டோம் ஏவுகணை பாதுகாப்பு கேடயத்திற்கான (Golden Dome missile defence shield) வடிவமைப்பை தேர்ந்தெடுத்து, அத்திட்ட மேலாளராக விண்வெளிப் படை ஜெனரல், மைக்கேல் குட்லினை (Michael Guetlein) நியமித்துள்ளார்.

சமீபக் காலமாக, சீனா மற்றும் ரஷ்யாவிலிருந்து வரும் அச்சுறுத்தல்களைத் தடுக்கும் நோக்கில் இத்திட்டம் அமலுக்கு கொண்டு வந்ததாக ட்ரம்ப் மேலும் கூறினார்.

இத்திட்டம், முழுமையாக நிறைவடைந்து அமலாக்கம் செய்வதற்கு அநேகமாக 10 ஆண்டுகளுக்கு மேலாகும் என்பதும் அதன் மொத்த செலவீனம் 175 பில்லியனைக் கடக்கும் என்பதனையும் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து, கோல்டன் டோம், தமது தாயகத்தைப் பாதுகாக்கும் என்றும் இத்திட்டத்தில் கனடா இணைய ஆர்வம் கொண்டிருப்பதாகவும் அமெரிக்க அதிபர் கருத்துரைத்துள்ளார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!