உலு சிலாங்கூர், ஜனவரி-25, உலு சிலாங்கூர், Felda Soeharto-வில் நடமாடி, ஊர் மக்கள் மத்தியில் பீதியைக் கிளப்பி வந்த சூரியக் கரடி குட்டி ஒரு வழியாக பிடிபட்டுள்ளது.
வனவிலங்குப் பாதுகாப்பு மற்றும் தேசியப் பூங்காக்கள் துறையான PERHILITAN வைத்த கூண்டில் புதன்கிழமையன்று அது சிக்கியது.
‘Wak Puyuh’ என அழைக்கப்பட்ட அந்த ஆண் கரடியின் நடமாட்டம் குறித்து முன்னதாக கிராம மக்கள் புகாரளித்திருந்தனர்.
புகார் கிடைத்த அன்றே PERHILITAN கூண்டுகளைப் பொருத்தியது.
பிடிபட்ட கரடி நல்ல நிலையிலிருப்பதாகவும், பரிசோதனைக்காக சுங்கை டூசுன் வனவிலங்கு பாதுகாப்பு மையத்திற்குக் கொண்டுச் செல்லப்பட்டதாவும் அத்துறை கூறியது.
93.5 கிலோ கிராம் எடையிலான ‘Wak Puyuh’ பின்னர், மேல் சிகிச்சைக்காகவும் பாதுகாக்கப்படவும் ஏதுவாக, பேராக், சுங்காயில் உள்ள தேசிய வனவிலங்கு சரணாலயம் கொண்டுச் செல்லப்பட்டது.