Latestமலேசியா

WCGC மலேசிய தேசிய கோல்ப் இறுதிப் போட்டியில் இளம் ஜோடி வெற்றி

 

ஷா ஆலாம், செப்டம்பர்-26,

சிலாங்கூர், ஷா ஆலாமில் நடைபெற்ற முதல் World Corporate Golf Challenge (WCGC) Malaysia போட்டியில், Isyraf Widad Muhammad Ikmal Opat மற்றும் Muhammad Adib Ibrahim ஆகிய இளைஞர்கள் தேசிய சாம்பியன்களாக வாகை சூடினர்.

7 ஹேண்டிகேப்பில் இணைந்து விளையாடிய இவர்களின் கூட்டணி, Kota Permai Golf & Country Club கிளப்பில் 42 Stableford புள்ளிகள் பெற்று, மற்ற 19 அணிகளை வென்றது.

இதன் மூலம், இவர்கள் வரும் அக்டோபரில் சீனா ஷங்ஹாயில் நடைபெறும் WCGC உலக இறுதிப்போட்டியில் மலேசியாவை பிரதிநிதித்துப் பங்கேற்பர்.

அவர்களுடன் சேர்ந்து, கடந்தாண்டு உலக அரங்கில் மலேசியாவை மூன்றாம் இடத்தில் வெற்றிப் பெறச் செய்த Anushka Gayan மற்றும் Lee Robert ஆகியோர் மீண்டும் பங்கேற்கிறார்கள்.

இம்முறை, ஒருங்கிணைப்பாளர்களின் வெற்றிகரமான மேல்முறையீட்டின் மூலம் கூடுதல் இடம் வழங்கப்பட்டது.

மூன்றாவது இடத்தை செல்வன் சுப்பிரமணியம் மற்றும் சசிகுமார் சுப்பிரமணியம் ஆகியோர் கைப்பற்றினர்.

சிலாங்கூர் பட்டத்து இளவரசர் ராஜா மூடா தெங்கு அமீர் ஷா விழாவுக்குத் தலைமைத் தாங்கி வெற்றியாளர்களுக்கு பரிசுகளை எடுத்து வழங்கி வாழ்த்தினார்.

மலேசிய அணி, இப்போது உலக மேடையில் கொடியை உயர்த்தத் தயாராகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!