
கோலாலம்பூர், அக்டோபர் 1 –
ஜொகூர், பாசிர் கூடாங் பகுதியில் உள்ள பெட்ரோன் பெட்ரோல் நிலையத்தில் BUDI95 திட்டம் தொடர்பான பரிவர்த்தனை சிக்கல் ஏற்பட்டதற்கு ‘wifi’ இணைப்பின் கோளாறே முக்கிய காரணமென பெட்ரோன் (Petron) நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.
இந்த பரிவர்த்தனை கோளாறு தனிப்பட்ட வாடிக்கையாளர் ஒருவருக்கு மட்டுமே நிகழ்ந்தது எனவும், வணிக தொடர் செயல்திட்டம் (Business Continuity Plan) உடனடியாக செயல்படுத்தப்பட்டு நிலைமை கையாளப்பட்டது என்றும் தெரிவிக்கப்பட்டது.
பாதிக்கப்பட்ட அந்த வாடிக்கையாளருக்கு லிட்டருக்கு 1.99 ரிங்கிட் என்ற சலுகை விலையில் பரிவர்த்தனை நடைபெற்றது என்று Petron மேலும் விளக்கமளித்தது.
மற்ற அனைத்து பெட்ரோன் நிலையங்களும் வழக்கம்போல் செயல்படுகின்றன என்றும் வாடிக்கையாளர்களுக்கு சீரான சேவை வழங்குவது தொடர்ந்தும் உறுதி செய்யப்படும் என்று பெட்ரான் பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
மேலும் சிக்கலை எதிர்கொள்ளும் வாடிக்கையாளர்கள் Petron Care ஹாட்லைனைத் தொடர்புக் கொள்வதன் வழி உதவியைப் பெறலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
குறிப்பாக, நேற்று சமூக ஊடகங்களில் பரவி வந்த வீடியோவில், பாசிர் கூடாங் பெட்ரான் நிலையத்தில் ஒருவருக்கு பரிவர்த்தனை சிக்கல் ஏற்பட்டது பதிவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.