Latestமலேசியா

X தளத்தில் 3R குறித்த சர்ச்சைக்குரிய பதிவு; ஆடவரை விசாரணைக்கு அழைத்த MCMC

புத்ராஜெயா, ஏப்ரல்-4- X தளத்தில் 3R எனப்படும் இனம், மதம் மற்றும் ஆட்சியாளர்கள் குறித்து நிந்தனைக்குரிய வகையில் பதிவிட்டதன் தொடர்பில், வாடிக்கையாளர் சேவை அதிகாரி ஒருவர் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

மலேசியத் தொடர்பு – பல்லூடக ஆணையமான MCMC அதன உறுதிப்படுத்தியது.

இன – மத மோதல்களை உருவாக்குவதோடு பொது அமைதியைக் கெடுக்கும் வகையிலும் அவரின் பதிவு இருந்துள்ளது.

இதையடுத்தே பிரிக்ஃபீல்ட்ஸ் போலீஸ் நிலையத்தில் அவரின் வாக்குமூலம் பதிவுச் செய்யப்பட்டது.

தடயவியல் பரிசோதனைக்காக, அவரின் விவேகக் கைப்பேசியும் சிம் அட்டையும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

1998-ஆம் ஆண்டு தொடர்பு – பல்லூடக ஆணையச் சட்டத்தின் கீழ் அவ்வாடவர் விசாரிக்கப்படுகிறார்.

குற்றம் நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சம் 500,000 ரிங்கிட் அபராதமும் 2 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் விதிக்கப்படலாம்

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!