Latestமலேசியா

Zoo Negara-வில் விலங்குகள் பட்டினிப் போடப்படுகின்றனவா? நிர்வாகம் திட்டவட்ட மறுப்பு

உலு கிள்ளான், செப்டம்பர்-30 – தேசிய மிருகக்காட்சி சாலையில் (Zoo Negara) விலங்குகள் பட்டினிப் போடப்பட்டு, முறையாகப் பராமரிக்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டை அதன் நிர்வாகம் மறுத்துள்ளது.

மாறாக, அங்குள்ள அனைத்து விலங்கினங்களும் கடுமையான சுகாதார பாதுகாப்போடு பராமரிக்கப்படுவதாக, Zoo Negara துணைத் தலைவர் Rosly @ Rahmat Ahmad Lana தெரிவித்தார்.

விலங்கியல் நிபுணர்கள் மற்றும் பயிற்சிப் பெற்ற பணியாளர்களின் முறையான கவனிப்புக்கும் கண்காணிப்புக்கும் அங்கு எந்த குறையுமில்லை.

அதோடு, உடல் நலம் பாதிக்கப்படும் விலங்குகளுக்கு ஒவ்வொரு நாளும் உரிய சிகிச்சையளிக்கப்பட்டு, அவை அணுக்கமாகக் கண்காணிக்கப்படுகின்றன.

அதே சமயம் விலங்குகளின் உடல் எடை அளவுக்கதிகமாக அதிகரித்து அவற்றின் உயிருக்கே ஆபத்தாய் போய் முடியாமலிருப்பதையும் பார்த்துக் கொள்ள வேண்டியிருப்பதாக Rosly கூறினார்.

நம்பிக்கை இல்லையென்றால் நீங்களே நேரில் வந்து உண்மை நிலவரத்தைப் பாருங்கள் என்றார் அவர்.

Zoo Negara-வில் உள்ள விலங்குகளின் நலன் புறக்கணிக்கப்பட்டு, அவற்றின் உடல் எடை மெலிந்து, மிகவும் பலவீனமாக இருப்பதாக, சமூக ஊடகப் பிரபலம் (influencer) ஒருவர் அண்மையில் குற்றம் சாட்டியிருந்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!