
துருக்கி, செப்டம்பர் 5 – துருக்கி கடற்பரப்பில், சுமார் 4.7 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான ஆடம்பர யாட் கப்பல், அதிகாரபூர்வமாக திறக்கப்பட்ட சில நிமிடங்களிலேயே கவிழ்ந்து கடலில் மூழ்கியது.
24 மீட்டர் நீளமுள்ள “Dolce Vento” என்ற அந்த யாட் தலைகீழாக கடலில் கவிழ்ந்ததைத் தொடர்ந்து அதில் இருந்த கப்பலின் உரிமையாளர், கேப்டன் மற்றும் இரண்டு பணியாளர்கள் உட்பட நால்வரும் கடலில் குதித்து நீந்தி கரையை அடைந்து உயிர் தப்பினர்.
இந்நிலையில் காவல் படையினரும், அவசர மருத்துவக் குழுவினரும் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து மீட்பு பணி வேலைகளை தொடங்கினர்.
யாட் கவிழ்ந்ததற்கான சரியான காரணம் இன்னும் அதிகாரபூர்வமாக வெளிப்படவில்லை என்றாலும் ஆரம்பத் தகவலின்படி, கப்பலின் நிலைத்தன்மை குறைபாடே காரணமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.