
லாஸ் ஏஞ்சலஸ், அக்டோபர்-11, இலோன் மாஸ்கின் தெஸ்லா நிறுவனம் cybercab எனப்படும் முழு தானியங்கி ரோபோ வகை டாக்சிகளை அறிமுகம் செய்துள்ளது.
பட்டாம் பூச்சி இறக்கை போன்ற கதவுகள் மற்றும் 2 பயணிகள் அமரக் கூடிய அளவுக்கு சிறிய அறையுடன் அக்கார் வடிவமைக்கப்பட்டுள்ளது.
30,000 டாலருக்கும் குறைவான விலையில் விற்கப்படவுள்ள அந்த ரோபோ டாக்சிகளில், வழக்கமாக மற்ற கார்களிலிருக்கும் ஸ்டீயரிங் (stereng) மற்றும் பெடல்கள் (pedal) இல்லை என்பது புதுமையாகும்.
இந்த அதிநவீன cybercab தானியங்கி டாக்சிகளை 2027-ஆம் ஆண்டுக்கு முன்பே சந்தைக்குக் கொண்டு வர இலக்கு வைக்கப்பட்டிருப்பதாக இலோன் மாஸ்க் சொன்னார்.
அமெரிக்கா, லாஸ் ஏஞ்சஸில் உள்ள Warner Bros ஸ்டூடியோவில் நடைபெற்ற ‘We, Robot’ எனும் நிகழ்வில் அது அறிமுகம் செய்யப்பட்டது.
அதே நிகழ்ச்சியில், ஒரே சமயத்தில் 20 பயணிகளை ஏற்றக் கூடிய முழுமையான தானியங்கி வாகனமான Robovan-னும் அறிமுகப்படுத்தப்பட்டது.
அதன் நேரலை இங்குள்ள சைபர்ஜெயா அனுபவ மையத்திலும் (Cyberjaya Experience Centre) ஒளிபரப்பானது.
இதனால் இன்று காலை 10 மணி முதலே மின்சார வாகன ஆர்வலர்கள் சைபர்ஜெயாவில் குழுமியிருந்தது குறிப்பிடத்தக்கது