அன்னையர் தினம் கொண்டாட்டத்தில் 20 அன்னையர்கள் சிறப்பிக்கப்பட்டனர்

கோலாலம்பூர், மே 5 – அண்மையில் தலைநகர் டான்ஸ்ரீ சோமா அரங்கத்தில் நடத்தப்பட்ட “அன்னைக்கு ஓர் ஆராதணை” அன்னையர் தின கொண்டாட்டத்தில் 20 அன்னையர்கள் சிறப்பிக்கப்பட்டனர்.
தேர்ந்தெடுக்கப்பட்ட அன்னையர்களுக்கு பொன்னாடை மற்றும் மாலை அணிவித்து , அன்பளிப்பும் வழங்கப்பட்டது.
டத்தின் J. கோகிலவாணி ஏற்பாட்டில் நடத்தப்பட்ட இந்த நிகழ்ச்சியில் பழம்பெரும் நடிகர் சசிகுமாரின் மகன் விஜயசாரதி கலந்துகொண்டு சிறப்பிக்கப்பட்ட அன்னையர்களுக்கு தனது பாராட்டுக்களை தெரிவித்துக் கொண்டார்.
மேலும் டத்தோ டாக்டர் கலைவாணர் மற்றும் சாய் பிரசாத்தும் சிறப்பு வருகையாளர்களாக கலந்து கொண்டனர்.
ஆண்டுதோறும் அன்னையர் தினத்தில் அன்னையர்களை பாராட்டி கௌரவிக்கப்படும் இந்த “அன்னைக்கு ஓர் ஆராதணை” நிகழ்ச்சி இவ்வாண்டும் சிறந்த முறையில் நடத்தப்பட்டது.
இந்த நிகழ்ச்சிக்கு மேலும் சிறப்பு சேர்க்கும் வகையில் உள்நாட்டு கலைஞர்கள் காதுக்கினிய இனிமையான பாடல்களை பாடி வந்திருந்தவர்களை மகிழ்சிக் கடலில் ஆழ்த்தினர்.
குடும்பம் மற்றும் பிள்ளைகள் வளர்ச்சிக்கு அர்ப்பணிப்பு உணர்வோடு பணியாற்றிய அன்னையர்கள் அடையாளம் கண்டு அவர்களை பாராட்டி கௌரவிக்கும் வகையில் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டதாக கோகிலவாணி தெரிவித்தார்