
வாஷிங்டன், பிப்ரவரி-4-அமெரிக்காவின் 250-ஆவது சுதந்திர தினக் கொண்டாட்டத்திற்கு, இந்தியாவின் புகழ்பெற்ற ‘இந்தியா கேட்’ நினைவுச் சின்னத்தை முன்மாதிரியாகக் கொண்டு, வாஷிங்டனில் ஒரு பிரமாண்ட வளைவு கட்ட வேண்டும் என அதிபர் டோனல்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
1931-ல் கட்டப்பட்ட இந்தியா கேட், வீர மரணமடைந்த படைவீரர்களுக்கான நினைவுச் சின்னமாக திகழ்கிறது.
இன்றளவும் இந்தியாவின் முக்கிய அடையாளச் சின்னங்களில் ஒன்றாக அது விளங்குகிறது.
அதேபோல், அமெரிக்காவில் புதிய வளைவும், நாட்டின் வலிமை, பெருமை மற்றும் மரபை பிரதிபலிக்கும் என ட்ரம்ப் கூறுகிறார்.
“இந்தியா கேட் பிரமிக்க வைக்கிறது; ஆனால் எங்களுடையது அதைவிட மிகப்பெரியதாகவும் பெருமை வாய்ந்ததாகவும் இருக்கும்” என்றார் அவர்.
ட்ரம்பின் ஆதரவாளர்கள் இதை தேசபக்தியின் சின்னமாகப் பார்க்கிறார்கள்; ஆனால் விமர்சகர்களோ, வீண் செலவு மற்றும் ‘கலாச்சார கடன் வாங்கல்’ என எச்சரிக்கின்றனர்.
ஜூலை 4-ஆம் தேதி அமெரிக்கா தனது 250-வது சுதந்திர தினத்தை வரவேற்கத் தயாராகும் நிலையில், புதிய நினைவுச் சின்னம் தேவைதானா, அல்லது ஏற்கனவே உள்ள சுதந்திரச் சின்னங்களே போதுமா என்ற விவாதம் அமெரிக்கர்களிடையே எழுந்துள்ளது.



