
தெஹ்ரான், ஏப்ரல்-3-அமெரிக்க-இஸ்ரேல் தொடர் தாக்குதலில், ஈரானின் மிகப்பெரிய பாலம் இடிந்து விழுந்துள்ளது.
தலைநகர் தெஹ்ரான் அருகே கட்டுமானத்தில் இருந்த B1 கராஜ் பாலமே தாக்குதலால் சரிந்தது.
136 மீட்டர் உயரம் கொண்ட இந்த பாலம், தெஹ்ரான் – கராஜ் இணைப்புக்கான முக்கியத் திட்டமாக இருந்தது.
முதல் தாக்குதலில் இரண்டு பொது மக்கள் காயமடைந்ததாக ஈரானிய அரசு தொலைக்காட்சி தெரிவித்தது.
இந்நிலையில் சம்பவ இடத்திற்கு மீட்பு குழுக்கள் சென்றபோது இரண்டாவது தாக்குதல் நடந்தது.
இதனை உறுதிச் செய்யும் விதமாக, அமெரிக்க அதிபர் டோனல்ட் ட்ரம்ப் ஒரு வீடியோவை வெளியிட்டு, “ஈரானின் மிகப்பெரிய பாலம் இடிந்து விழுந்தது; இன்னும் பல தாக்குதல்கள் வரும்” என எச்சரித்தார்.
அதோடு, அடுத்த 2–3 வாரங்களில் மிகக் கடுமையான தாக்குதல்கள் நடக்கும் என்றும், மின்நிலையங்கள் கூட இலக்காகும் என அவர் மீண்டும் ‘நினைவூட்டினார்’.
வெறும் பாலமே என்றாலும், இச்சம்பவம் வியூக அடிப்படையில் ஈரானுக்குப் பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது.
ட்ரம்ப் அடுத்து எதைக் தாக்குவாரோ என்ற கேள்வியுடன் உலகத்தின் கவனம் திரும்பியுள்ளது.



