
வாஷிங்டன், ஜனவரி 26 – அமெரிக்காவை கடும் குளிர்கால பனிப்புயல் தாக்கி வருகிறது. கனத்த பனி மழை மற்றும் பனிக்கட்டி காரணமாக Texas முதல் நியூ இங்கிலாந்து வரை பல மாநிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
பனிக்கட்டி படிந்ததால் மரங்கள் விழுந்து, மின்கம்பிகள் சேதமடைந்துள்ளன. இதனால் தென் அமெரிக்காவின் சில மாநிலங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து மேலும் சில பகுதிகளில் மழை, பனி மற்றும் இடியுடன் கூடிய அரிய வானிலை நிகழ்வும் பதிவாகியுள்ளது.
பயணங்கள் கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில், நாடு முழுவதும் 14,800க்கும் அதிகமான விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும், பனியால் வழுக்கலான சாலைகள் காரணமாக பல முக்கிய நெடுஞ்சாலைகளும் மூடப்பட்டுள்ளன.
இந்நிலையில், வானிலை நிபுணர்கள், அடுத்த ஒரு வாரம் கடும் குளிர் தொடரும் என தெரிவித்துள்ளனர். இதனால் பெரும்பான்மையான அமெரிக்க மக்கள் பூஜ்ஜியத்திற்குக் கீழான வெப்பநிலையை எதிர்கொள்ள நேரும் அபாய நிலை உள்ளதென்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் விளைவாக, மின்சாரம் இல்லாத பகுதிகளில் வாழும் மக்கள் பல நாட்கள் கடும் குளிரில் சிரமப்பட வேண்டிய நிலை ஏற்படும்.



