Latestமலேசியா

அம்னோவில் மீண்டும் இணைவதற்கு கடிதம் சமர்ப்பித்தார் கைரி

கோலாலம்பூர், மார்ச் 16-அம்னோ இளைஞர் பிரிவின் முன்னாள் தலைவர் கைரி ஜமாலுடின் , கட்சியில் மீண்டும் சேரக் கோரி, கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் ஸாஹிட் ஹமிடிக்கு ( Ahmad Zahid Hamidi ) மேல்முறையீட்டுக் கடிதத்தை சமர்ப்பித்துள்ளார்.

நேற்று நடைபெற்ற கூட்டத்தின் போது அந்தக் கடிதத்தைப் பெற்றதாக அம்னோ தலைவர் Zahid Hamidi கூறினார்.

இந்த விண்ணப்பத்தை நான் தனிப்பட்ட முறையில் பெற்றுள்ளேன், மேலும் அதனை ஆராய்ந்து , தகுந்த நடவடிக்கைக்காக டத்தோஸ்ரீ முகமட் காலிட் நோர்டின் தலைமையிலான ஒற்றுமைக் குழுவிற்கு அனுப்புவேன் என்று ஸாஹிட் தெரிவித்தார்.

வெளியேற்றப்பட்ட மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, 50 வயதான கைரி அண்மையில் கட்சியில் சேர்வதற்கு மீண்டும் ஆர்வத்தை வெளிப்படுத்தினார்.

வெளியேற்றப்பட்ட அல்லது இடைநீக்கம் செய்யப்பட்ட முன்னாள் உறுப்பினர்களுக்கு நிபந்தனையின்றி அம்னோவுக்குத் திரும்ப அனுமதிக்கும் வகையில், கட்சி அதன் கதவுகளைத் திறந்து வைப்பதாக மார்ச் 5 ஆம்தேதி ஜாஹிட் அறிவித்திருந்தார்.

இந்த முயற்சி கட்சியின் போராட்டத்தில் இணைய விரும்பும் எவருக்கும் திறந்திருக்கும் என்று தேசிய முன்னணியின் தலைவருமான அவர் கூறியிருந்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!