Latestமலேசியா

அம்பாங் ஜெயாவில் கொள்ளை நாடகமாடிய நபர் கைது

கோலாலம்பூர், ஜனவரி 23 – தனது முதலாளிக்குச் சொந்தமான 5,000 ரிங்கிட் பணத்தை பயன்படுத்தியதை மறைக்க, கொள்ளை நடந்ததாக பொய் புகார் அளித்த ஆடவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

அம்பாங் ஜெயா, ஜாலான் தஞ்சோங் 1 பகுதியிலுள்ள, இரு வெளிநாட்டவர்கள் மோட்டார் சைக்கிளில் வந்து, கத்தியை காட்டி மிரட்டி தனது பையையும், அதில் இருந்த முதலாளியின் பணத்தையும் பறித்துச் சென்றனர் என்று அச்சந்தேக நபர் போலீசில் பொய் புகார் அளித்ததாக அம்பாங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைவர் Asisten Komisioner Khairul Anuar Khalid தெரிவித்துள்ளார்.

ஆனால், போலீசார் நடத்திய விசாரணையில், அத்தகைய கொள்ளை சம்பவம் எதுவும் நடைபெறவில்லை என்றும், அவர் கொடுத்த புகார் முழுமையாக பொய்யானது என்றும் தெரிய வந்தது.

இதனைத் தொடர்ந்து, அரசு அதிகாரிக்கு பொய்தகவல் அளித்த குற்றத்திற்காக, அவர்மீது குற்றச் சட்டத்தின் கீழ் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!