
கோலாலம்பூர், ஜூலை 22 – அரச குடும்பத்தைச் சேர்ந்த ஆடவருடன் கடந்த பிப்ரவரி மாதம் திருமணம் நடைபெற்றதாக கூறி போலி திருமண சான்றிதழ், புகைப்படம் மற்றும் நிச்சயத்திற்கு வழங்கப்பட்ட பரிசு பொருட்களின் காணொளியை பதிவேற்றம் செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட பெண் ஒருவர் மனநிலை பரிசோதனைக்காக பேரா, தஞ்சோங் ரம்புத்தான் Bahagia மனநோய் மருத்துவமனைக்கு ஒரு மாத காலம் சிகிச்சையை மேற்கொள்ளும்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது .
43 வயதுடைய பெர்சனா அவ்ரில் சோலுடா( Persana Avril Sollunda) என்ற பெண்ணுக்கு எதிரான வழக்கை தொடர்வதற்கு முன் அவரது மனநிலை குறித்த சுகாதார அறிக்கையை அரசு தரப்பு வழக்கறிஞர் ரவிந்தர்ஜிட் கவுர் பெறுவதற்கு நீதிபதி நோர்மா இஸ்மாயில் முடிவு செய்தார்.
குற்றஞ்சாட்டப்பட்ட பெண்ணை பிரதிநிதிக்கும் வழக்கறிஞர் மேகலா ராஜேந்திரன் இந்த முடிவை ஆட்சேபிக்கவில்லை. இன்று தொடங்கி ஒரு மாத காலத்திற்கு சம்பந்தப்பட் பெண் மனநிலை சிகிச்சை பெறுவதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியதோடு இந்த வழக்கை மீண்டும் செவிமடுப்பதற்கு ஆகஸ்டு 19ஆம் தேதியை நீதிபதி நோர்மா இஸ்மாயில் நிர்ணயித்தார்.
மற்றவர்களை காயப்படுத்தும் நோக்கத்துடன், அரச குடும்பத்தைச் சேர்ந்த ஒருவருக்கும் பட்டத்து இளவரசி ஷானாவுக்கும் இடையிலான போலி திருமணச் சான்றிதழைக் காட்டும் ‘king.charles.ratu’ என்ற கணக்கு மூலம் பிப்ரவரி மாதம் 25ஆம் தேதி டிக்டோக்கில் போலி வீடியோவை உருவாக்கி அதில் படங்களை அனுப்பியதாக Persana Avil மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்தப் பதிவு பிப்ரவரி 26 ஆம் தேதி காலை 10 மணிக்கு, புக்கிட் அமான், மெனாரா KPJயில் இணைய குற்ற மற்றும் பல்லூடக புலனாய்வுப் பிரிவு அலுவலகத்தில் , வணிகக் குற்றப் புலனாய்வுத் துறையால் வாசிக்கப்பட்டது.