
புத்ராஜெயா, பிப்ரவரி-28-அரசாங்கப் பல்கலைக்கழக மாணவர் ஒருவர் புனித அல்-குர்ஆனை மிதித்த சம்பவம் தொடர்பாக, மலேசியத் தொடர்பு – பல்லூடக ஆணையமான MCMC விசாரணை நடத்தி வருகிறது.
கடும் சர்ச்சைக்குள்ளான அந்த வீடியோ Threads தளத்தில் ryandaselva என்ற கணக்கில் பதிவேற்றப்பட்டதாக கூறப்படுகிறது.
அச்செயல் இஸ்லாத்தை அவமதிப்பதாகவும், சமூக ஒற்றுமைக்கு ஆபத்தானதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சம்பந்தப்பட்ட மாணவர் ஏற்கனவே கைதாகி விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
MCMC-யின் சட்டம் 588 கீழ் இச்சம்பவம் விசாரிக்கப்படும் நிலையில், குற்றம் நிரூபிக்கப்பட்டால், அதிகபட்சம் RM500,000 அபராதமும் ஈராண்டுகள் சிறைத்தண்டனையும் விதிக்கப்படலாம்.
எனவே, பொதுமக்கள் சமூக ஊடகங்களை பொறுப்புடன் பயன்படுத்துமாறும், மத உணர்வுகளை காயப்படுத்தும் அல்லது தேசிய ஒற்றுமையை பாதிக்கும் உள்ளடக்கங்களை பகிர வேண்டாமெனவும் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.



