Latestஉலகம்

ஆப்கானிஸ்தானுடன் போருக்குத் தயார்; பாகிஸ்தான் தற்காப்பு அமைச்சர் அறிவிப்பு

இஸ்லாமாபாத், பிப்ரவரி-28-ஆப்கானிஸ்தானுடன் வெளிப்படையான போருக்குத் தயாராக உள்ளதாக பாகிஸ்தானின் தாற்காப்புத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

காபூலின் நடவடிக்கைகளால் கொஞ்ம் கொஞ்சமாக இஸ்லாமாபாத் பொறுமையிழந்து வருவதாக Khawaja Mohammad Asif கூறினார்.

வியாழக்கிழமை இரவு தாலிபான் இராணுவம், எல்லையில் பாகிஸ்தானிய இராணுவச் சாவடிகள் மீது அதிரடி தாக்குதல் நடத்தியதை அடுத்து இவ்வெச்சரிக்கை வெளியாகியுள்ளது.

அத்தாக்குதலில் பாகிஸ்தான் இராணுவத்தின் 19 சாவடிகளையும் 2 முகாம்களையும் கைப்பற்றியதாக தாலிபான் கூறிக் கொண்டது; அதோடு 55 பாகிஸ்தான் இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டு 13 பொது மக்கள் காயமடைந்ததாக அது கூறியது.

நிலைமை இவ்வாறிருக்க, ஆப்கானிஸ்தானின் 22 இராணுவ இலக்குகளைத் தாக்கி 200 தாலிபான் போராளிகளைக் கொன்றதாகவும், தங்கள் தரப்பில் 13 வீரர்கள் மரணமடைந்ததாகவும் பாகிஸ்தான் கூறுகிறது.

இது இரண்டு அண்டை நாடுகளுக்கிடையேயான பதற்றம் தீவிரமடைந்துள்ளதை காட்டுகிறது.

இந்தியாவுடன் நட்புப் பாராட்டும் ஆப்கானிஸ்தானிய தாலிபான் அரசாங்கம், ஆயுதக் கும்பல்களை ஏவி விட்டு எல்லைப் பகுதிகளில் தாக்குதல் நடத்துவதாக பாகிஸ்தான் குற்றம் சாட்டி வருகிறது.

இதற்கு பதிலடியாக பாகிஸ்தானும் இராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

இதனால் மாதக்கணக்கில் எல்லையில் மோதல்கள் தொடருகின்றன.

கடந்த அக்டோபரில் மட்டும் ஏராளமான இராணுவத்தினர், பொது மக்கள் மற்றும் ஆயுதப் போராளிகள் கொல்லப்பட்டனர்.

ஆனால், தாலிபான் அரசோ இந்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளது.

மாறாக, பாகிஸ்தான் அதன் உள்நாட்டு பாதுகாப்பு பிரச்னைகளுக்கு தேவையில்லாமல் ஆப்கானிஸ்தானை குற்றம் சாட்டுகிறது என அது கூறியுள்ளது.

இந்த பதற்றம் தெற்காசிய வட்டாரத்தின் நிலைத்தன்மைக்கு பெரிய கவலையை ஏற்படுத்தியுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!