ஆராவ், செப்டம்பர் -9 – பெர்லிஸ், ஆராவில் புல்வெட்டும் இயந்திரம் திடீரென தீப்பற்றிக் கொண்டதில், புல்வெட்டும் தொழிலாளி உடல் கருகி மாண்டார்.
இறந்து 3 நாட்கள் ஆகியிருக்கலாமென நம்பப்படும் அவ்வாடவரின் உடல், ஞாயிற்றுக்கிழமை மாலை Jalan Jejawi-யில் வீட்டொன்றின் முன்புறம் பொது மக்களால் கண்டெடுக்கப்பட்டது.
தகவல் கிடைத்து சம்பவ இடம் வந்தடைந்த போலீஸ், அங்கு குற்ற அம்சம் எதனையும் கண்டறியவில்லை.
இறந்து போன ஆடவர் இன்னும் அடையாளம் காணப்படவில்லை.
சவப்பரிசோதனைக்காக சடலம், கங்கார் துவாங்கு ஃபாவுசியா மருத்துவமனைக்குக் கொண்டுச் செல்லப்பட்டுள்ளது.