புது டெல்லி, நவம்பர்-14 – கடந்த சில நாட்களாகவே அடர்த்தியான புகை மூட்டம் சூழ்ந்து காணப்பட்ட இந்தியத் தலைநகர் புது டெல்லியில், வியாழக்கிழமையன்று காற்றின் தரம் படுமோசமாக வீழ்ச்சிக் கண்டது.
API எனப்படும் காற்றுத் தூய்மைக் கேட்டுக் குறியீடு நேற்று 424 என்ற அபாய அளவை எட்டியதாக, டெல்லி வானிலை மற்றும் காற்றுத் தர எச்சரிக்கை தரப்பு கூறியது.
201 முதல் 300 வரையிலான API குறியீடு ஆரோக்கியமற்ற காற்றித் தரத்தைக் குறிக்கும்; 301 முதல் 400 வரையிலான குறியீடு மிகவும் ஆரோக்கியமற்றதாகவும், 401 முதல் 500 வரையிலான குறியீடு அபாயகரமானதாகவும் பொருள்படும்.
காற்றித் தரம் அபாயகரமான அளவை எட்டும் போது, மக்களின் ஆரோக்கியததை அது பாதிக்கலாமென சுகாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
புது டெல்லியில் இந்த காற்றுத் தூய்மைக் கேட்டு பிரச்னை ஒரு முடிவில்லாமல் போய்க் கொண்டிருக்கிறது.
குறிப்பாக குளிர் காலத்தில், அருகாமையிலுள்ள விவசாயிகள் விவசாயக் கழிவுகளைப் போட்டு எரிப்பதை வழக்கமாக வைத்துள்ளனர்.
இது, ஏற்கனவே நிலக்கரி ஆலைகளிலிருந்து வெளியேறும் கரும்புகை, தொழிற்சாலைகளில் கக்கும் புகைகளுடன் சேர்ந்து காற்றித் தரத்தை மோசமாக்கி விடுகிறது.