
சிப்பாங், ஆகஸ்ட் 7 – நேற்றிரவு, கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையம் (KLIA) 1 இல் நடத்தப்பட்ட சோதனை நடவடிக்கையில், 2,500க்கும் மேற்பட்ட சிவப்பு காது Slider ஆமைகளை இந்தியாவிற்குக் கடத்திச் செல்லும் முயற்சியை மலேசிய எல்லைக் கட்டுப்பாடு மற்றும் பாதுகாப்பு நிறுவனம் (AKPS) வெற்றிகரமாக முறியடித்துள்ளது.
பெங்களூருக்கு செல்லவிருக்கும் விமானத்தில் ஏறவிருந்த சந்தேக நபர், விமானம் புறப்படும் வாயிலில் கைது செய்யப்பட்டுள்ளார்.
அனைத்து ஆமைகளும் 348,000 ரிங்கிட் மதிப்புடையவை என்றும் அவை மேல் விசாரணைக்காக பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என்றும் அறியப்படுகின்றது.
இந்த வழக்கு வனவிலங்கு பாதுகாப்புச் சட்டம் மற்றும் அழிந்து வரும் உயிரின சர்வதேச வர்த்தகச் சட்டத்தின் கீழும் விசாரிக்கப்பட்டு வருகின்றது.