Latestஉலகம்

இந்தியாவில் பாராகிளைடிங் மூலம் போக்குவரத்தை முறியடித்து 5 நிமிடங்களில் தேர்வுக்கு வந்த மாணவர்

புதுடில்லி, பிப் 25 – இந்தியாவில் தேர்வுக்கு இன்னும் 15 நிமிடங்களே இருந்த நிலையில் கல்லூரி மாணவர் ஒருவர் தனது தேர்வு நடைபெறும் இடத்திற்கு பாராகிளைடிங் ( Paragliding ) மூலம் நெரிசலை முறியடித்து 5 நிமிடத்திற்குள் வந்து வெற்றிகரமாக தேர்வு எழுதியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி அந்த காணொளி சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது.

ஏன் இன்னும் தேர்வு இடத்திற்கு வந்தடையவில்லை என திடீரென தனது நண்பரிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்போதுதான் தாமதத்தை சமர்த் மஹாங்டே ( Samarth Mahangde ) என்ற அந்த மாணவர் உணர்ந்திருக்கிறார்.

தாம் காரில் பயணம் செய்தால் 15 நிமிடங்களில் தேர்வு நடைபெறும் இடத்தை அடைவது சாத்தியமில்லையென அவர் உணர்ந்ததோடு தேர்வு நடைபெறும் இடத்திற்கு இன்னும் 15 கிலோமீட்டர் இருப்பதையும் அறிந்து உடனே உள்ளூர் Paragliding நிபுணரான கோவிந்த் யெவாலேவின் (Govind Yewale) உதவியை நாடினார்.

Paragliding மூலம் செல்ல வேண்டிய இடத்திற்கு சமர்த்தை கொண்டுச் சேர்க்க ஒப்புக் கொண்ட கோவிந்த் உரிய நேரத்தில் தேர்வு மண்டபத்திற்கு சென்றடைந்தார்.

ஏற்கனவே மாணவர்களுக்கு தேர்வு தாட்கள் வழங்கப்பட்டிருந்தபோதிலும் அதிஷ்டவசாமாக அவர் தேர்வு மண்டபத்திற்குள் செல்ல அனுமதிக்கப்பட்ட நிலையில் தேர்வு அட்டவணையின் மாற்றங்கள் குறித்து அவருக்கு அறிவிக்கப்படாததே இந்த பிரச்னைக்கு காரணமாகும்.

சம்பவத்தின் போது, தாம் வேலை செய்து கொண்டிருந்ததாகவும் தனது குடும்பத்தை ஆதரிப்பதற்காக ஒரே நேரத்தில் வேலை செய்து கொண்டே படிப்பதாகவும் சமர்த் தெரிவித்திருக்கிறார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!