
கோலாலம்பூர், நவம்பர்- 6,
கடந்த ஆண்டு முதல் வேலையிலிருந்து தற்காலிகமாக இடைநீக்கம் செய்யப்பட்ட “இன்ஸ்பெக்டர் ஷீலா” மீது மீண்டும் புகார் எழுந்துள்ளது. செவ்வாய்க்கிழமை இரவு ,Jalan Ipoh, Chow Kitடில் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டியதற்காக கைது செய்யப்பட்ட பாகிஸ்தானிய நபரை காவல்துறை அதிகாரிகள் மிரட்டியதாக குற்றம்சாட்டி அவர் தகராற்றில் ஈடுபட்டுள்ளார்.
அன்றைய தினம் இரவு மணி 9.30 அளவில் துணிக்கடையில் வேலை செய்து வந்த 34 வயதுடைய ஆடவரிடம் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் வாகன ஓட்டுனர் உரிமத்தை கொண்டிருக்காத காரணத்தால் அவரை போலீஸ்காரர்கள் கைது செய்தபோது இன்ஸ்பெக்டர் ஷீலா குழப்பத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது.
சோதனை நடத்திக் கொண்டிருந்தபோது , அவர் திடீரென பின்னால் இருந்து வந்து பணியில் இருந்த அதிகாரிகள் அந்த பாகிஸ்தான் ஆடவரை மிரட்டியதாக கூறியுள்ளார்.
மேலும் போலீஸ் அதிகாரிகளுக்கு சட்டம் தெரியவில்லை என்றும் இன்ஸ்பெக்டர் ஷீலா காவல்துறையினரை கேலி செய்துள்ளார் என கோலாலம்பூர் போலீஸ் தலைவர் டத்தோ பாடில் மார்சுஸ் ( Fadil Marsus ) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து இதர போலீஸ்காரர்கள் அவருக்கு எதிராக புகார் செய்துள்ளதால் இது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக Fadil Marsus தெரிவித்துள்ளார்.



