இளவரசருடன் திருமணமா? போலி ‘nikah’ சான்றிதழ்; சம்பத்தப்பட்ட பெண்ணுக்கு ஓராண்டு சிறை

கோலாலம்பூர், அக்டோபர் 31 –
தான் ஒரு அரச குடும்ப உறுப்பினரைத் திருமணம் செய்துகொண்டதை நிரூபிப்பதற்கு போலி ‘நிக்கா’ சான்றிதழ், வீடியோ மற்றும் படங்களை TikTok-ல் பதிவேற்றிய 43 வயதான பெண்ணுக்கு நீதிமன்றம் இன்று ஓராண்டு சிறைத் தண்டனை விதித்துள்ளது.
குற்றச்சாட்டின்படி, குற்றவாளி “king.charles.ratu” என்ற TikTok கணக்கில் “Crown Princess Ratu Shana” எனத் தன்னை காட்டி, அரச குடும்ப உறுப்பினருடன் நிக்கா சான்றிதழ், போலி படங்களைப் பதிவேற்றினார். அந்த பதிவு அடுத்த நாளே புக்கிட் அமான் இணைய குற்றப்பிரிவினரால் கண்டறியப்பட்டது.
இக்குற்றம் அரச குடும்பத்தின் மரியாதையையும் சமூக அமைதியையும் பாதித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அதன் அடிப்படையில் வழங்கப்பட்ட இந்தச் சிறைத் தண்டனை, 2024 ஜூன் 18, கைது செய்யப்பட்ட தேதியிலிருந்து கணக்கிடப்படும் என்று நீதிமன்றத்தில் அறிவிக்கப்பட்டது.
குற்றவாளி இதற்கு முன்னதாக அனுபவித்த திருமணத் துயரம் மற்றும் மனநலப் பிரச்சனைகள் காரணமாகதான் இக்குற்றத்தை புரிந்துள்ளார் என்பதனை நீதிமன்றத்தில் செய்யப்பட்ட வாதத்தின் வழி கண்டறியப்பட்டது.



