Latestமலேசியா

ஈப்போவில் நிலச்சரிவு: மண்தோண்டி இயந்திரத்தில் சிக்கி தொழிலாளி பலி

ஈப்போ, ஆகஸ்ட் 26 – நேற்று, ஈப்போ கெராமாட் பூலாய்யில் (Keramat Pulai) ஏற்பட்ட நிலச்சரிவில், மண்தோண்டி இயந்திரம் (excavator) மண்ணில் புதைந்ததில் 60 வயது தொழிலாளி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

மலைப்பகுதியில் அகழ்வாராய்ச்சி பணிகள் நடைபெற்று கொண்டிருந்தபோது திடீரென நிலச்சரிவு ஏற்பட்டு, இயந்திரம் மண் குவியலுக்குள் சிக்கியதைத் தொடர்ந்து அதிலிருந்த நபரும் உயிரிழந்தார் என்று பேராக் மாநில தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் செயல் உதவி இயக்குநர் ஷாஸ்லீன் ஹனாஃபியா (Shazlean Hanafiah) தெரிவித்துள்ளார்.

தகவல் அறிந்தவுடனேயே சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் தங்களது மீட்பு பணி வேலைகளை உடனடியாக தொடங்கியது குறிப்பிடத்தக்கது.

மேலும் மற்றொரு மண்தோண்டி இயந்திரத்தைப் பயன்படுத்தி மண் அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட்ட பின்னர், எந்திரத்தில் சிக்கியிருந்த நபரை வெளியே எடுத்தனர்.

எந்திரத்திலிருந்து மீட்கப்பட்ட அந்நபர் உயிரிழந்திருந்ததை அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!