Latestஅமெரிக்காஉலகம்

ஈரானில் அமெரிக்க விமானி துணிச்சலான மீட்பு; ‘அற்புதம்’ என டிரம்ப் பாராட்டு”

வாஷிங்டன், ஏப்ரல்-5-“அமெரிக்க வரலாற்றில் மிகத் துணிச்சலான மீட்பு நடவடிக்கை” நடைபெற்றுள்ளதாக அமெரிக்க அதிபர் டோனல்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

ஈரானிய மலைப்பகுதியில் எதிரி வலைக்குள் சிக்கியிருந்த அமெரிக்க விமானப்படை கர்னல் அதிகாரி ஒருவரை, தொடர்ந்து கண்காணித்து, அமெரிக்கப் படையினர் ஆபத்தான மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டதாக அவர் சொன்னார்.

காப்பாற்றிக் கொண்டு வரப்பட்ட அந்த அதிகாரி காயமடைந்தாலும், விரைவில் குணமடைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

எந்த அமெரிக்க உயிரிழப்பும் இல்லாமல் இந்த நடவடிக்கை வெற்றிகரமாக முடிந்திருப்பதாகக் கூறிய ட்ரம்ப், ஈரானிய வான்வெளியில் அமெரிக்காவின் முழு ஆதிக்கத்தை இது உணர்த்துவதாக பெருமிதம் தெரிவித்தார்.

இன்னொரு விமானி முன்னதாகவே மீட்கப்பட்டதாகவும், இரண்டாவது நடவடிக்கை வெளியில் கசியாமல் பாதுகாக்கும் பொருட்டு அத்தகவல் உடனடியாக வெளியிடப்படவில்லை என்றும் ட்ரம்ப் தெரிவித்தார்.

இப்போது இரு விமானிகளும் பாதுகாப்பாக உள்ளனர்.

துல்லியமும் துணிச்சலுமாக இந்த மீட்பு நடவடிக்கைகள் நிறைவேற்றப்பட்டதாக ட்ரம்ப் பாராட்டியுள்ளார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!