
மலாக்கா, செப்டம்பர் 22 – மலாக்கா கம்போங் ஜாவாவில் வாடிக்கையாளர்களை கவரும் நோக்கில் அல்பாக்கா உட்பட 23 விலங்குகளை வைத்திருந்த உணவகத்திற்கு, ஊராட்சி மன்ற (MBMB) அதிகாரிகள் 10,250 ரிங்கிட் அபராதம் விதித்து, ஏழு நாட்கள் உணவகத்தை மூட உத்தரவு பிறப்பித்துள்ளனர்.
உரிமையாளர் அனுமதி இன்றி விலங்குகளை உணவகத்தில் வைத்திருந்தது உரிம நிபந்தனைகளுக்கு முரண்பட்டது என்றும் உணவகத்தை விலங்குகள் சாலை போன்று மாற்றியிருப்பது தண்டிக்க தக்க ஒன்று என்று ஊராட்சி மன்ற தலைவர் டத்தோ ஷாடான் ஒத்மான் (Datuk Shadan Othman) தெரிவித்தார்.
இத்தகைய யோசனை சுவாரஸ்யமாக இருந்தாலும், விலங்குகளின் இயற்கை நலனை கருத்தில் கொண்டு தெளிவான வழிகாட்டி அவசியம் என மாநில துணை ஆட்சி குழு உறுப்பினர் டத்தோ முகமட் நூர் ஹெல்மி குறிப்பிட்டார்.
இந்நிலையில் இக்குற்றம் பொழுதுபோக்கு மற்றும் மகிழ்ச்சி நிலைய சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டு மேல் விசாரணை தொடங்கப்பட்டுள்ளது