Latestமலேசியா

உணவில் சுவையை கூட்டுவதற்கு உலர்ந்த எறும்புகளைச் சேர்த்த உணவகம் மீது விசாரணை

சோல், ஜூலை 11- பயனீட்டாளர்களுக்கு உணவில் சுவையை கூட்டுவதற்காக உலர்ந்த எறும்புகளைச் சேர்த்த தென் கொரிய உணவகம் சட்ட நடவடிக்கையை எதிர்நோக்கவிருக்கிறது.

கொரிய உணவு தூய்மை சட்டத்திற்கு ஏற்ப இந்த விவகாரம் மேல் விசாரணைக்காக அரசு தரப்பு வழக்கறிஞரிடம் ஒப்படைத்துள்ளதாக கொரிய மருந்துகள் மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது.

சம்பந்தப்பட்ட உணவகத்தின் உரிமையாளர் அமெரிக்கா மற்றும் தாய்லாந்திலிருந்து இருவகை எறும்புகளை இதற்காக இறக்குமதி செய்ததாக நம்பப்படுகிறது. விரைவாக அனுப்பி வைக்கும் சேவையின் மூலம் 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்கும் 2024ஆம் ஆண்டு நவம்பர் மாதத்திற்குமிடையே அந்த எறும்புகள் தென் கொரியாவுக் அனுப்பிவைக்கப்பட்டன.

பூச்சிகள் இனத்தை சேர்ந்த இரண்டு வகை எறும்புகள் உன்பது பாதுகாப்பானதாக கருதப்பட்டாலும் உணவில் சேர்ப்பதற்கு முன் அவற்றிற்கு அங்கீகாரம் பெறவேண்டும் என கொரிய மருந்துகள் மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

2021 ஆம் ஆண்டு முதல் 2025ஆம் ஆண்டு ஜனவரி மாதம்வரை 12,000 தட்டுக்களைக் கொண்ட சிறப்பு உணவுகளுக்கு அந்த எறும்புகள் பயனபடுத்தப்பட்டுள்ளன. ஒவ்வொரு தட்டு உணவிலும் மூன்று முதல் ஐந்து காய்ந்த எறும்புகள் பயன்படுத்தப்பட்டதாக தெரிகிறது.

வெட்டுக்கிளி, பட்டுப் புழு, உட்பட 10 வகையான பூச்சிகள் மடடுமே உணவுகளில் பயபடுத்துவதற்கு கொரியாவில் அனுமதிக்கப்பட்டுள்ளன.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!