
2026 முதல், நாட்டில் உள்ள உயர் கல்விக் கூட மாணவர்கள் 2 புதியப் பாடங்களை கட்டாயமாக கற்க வேண்டும்.
தேசியம் மற்றும் அரசியலமைப்புச் சட்டம் மீதான இளம் தலைமுறையினரின் அறிவைப் பெருக்கும் நோக்கில் அவை அறிமுகம் காண்கின்றன.
‘Aspirasi Pembinaan Negara Bangsa’ அல்லது ‘தேசத்தைக் கட்டியெழுப்பும் அபிலாஷைகள்’ எனும்
பாடம் மலேசியாவின் அரசியல், அரசியலமைப்பு மற்றும் ஒற்றுமை குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்தைக் கொண்டுள்ளது.
அதே சமயம், ‘Falsafah dan Pemikiran Kontemporari’ அதாவது ‘தத்துவம் மற்றும் நவீன சிந்தனைகள்’ எனும் பாடம் – சமூக சிக்கல்கள், ஆழமானச் சிந்தனைகள், பல்வேறு பார்வைகள் போன்றவற்றை முன்னிறுத்தும்.
இவை Etika dan Peradaban அல்லது ‘நெறிமுறைகள் மற்றும் நாகரீகம்’ பாடத்தை மாற்றும் வகையில் கொண்டு வரப்படுகின்றன.
மாணவர்களின் சமூக விழிப்புணர்வை வளர்த்தல், பொது மக்கள் நலன் காத்தல், பொறுப்புணர்வு மற்றும் நாட்டுப்பற்றை ஊக்குவித்தல் ஆகிய முக்கிய அம்மசங்களை அடையும் பெரிய நோக்கத்தை இது கொண்டுள்ளது.
இந்த பாடங்கள் 1.2 மில்லியனுக்கும் மேற்பட்ட IPT, பாலிடெக்னிக் மற்றும் சமூகக் கல்லூரி மாணவர்களுக்குக் கட்டாயமாகும்.
MPU எனப்படும் பொதுப் பாடப்பிரிவு மறுசீரமைப்பு செயற்குழுவை மேற்கோள் காட்டி BH Online இந்த பிரத்யேக செய்தியை வெளியிட்டுள்ளது.



