Latestமலேசியா

உரிமம் இல்லாமல் பட்டாசு வைத்திருந்த 2 ஆடவர்கள் கைது

குளுவாங், பிப்ரவரி-26,ஜோகூர் குளுவாங்கில் உரிமம் இல்லாமல் பட்டாசுகள் வைத்திருந்த இரண்டு உள்ளூர் ஆடவர்களைப் போலீஸ் கைதுச் செய்துள்ளது.

Ops Cantas/Ops Limau போலீஸ் சோதனையின் போது, செல்லுபடியாகும் எந்த உரிமமும் இல்லாமல் பல வகையான பட்டாசுகளை அவர்கள் வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அனைத்து பட்டாசுகளும் பறிமுதல் செய்யப்பட்டன.

இருவருக்கும் ஏற்கனவே குற்றப் பதிவுகள் இருப்பதும் அம்பலமானது.

இது குறித்து போலீஸ் மேல் விசாரணை நடத்தி வருகிறது.

உரிமம் இல்லாமல் பட்டாசுகளை வைத்திருப்பது அல்லது விற்பது மலேசியாவில் ஒரு கடுமையான குற்றமாகும் என்பதை போலீஸ் மீண்டும் நினைவுறுத்தியுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!