
உலு சிலாங்கூர், ஜனவரி-31-உலு சிலாங்கூர், புக்கிட் செந்தோசாவில் இரவுச் சந்தைக்கு உடன் பிறப்புகளுடன் நடந்துச் சென்ற பதின்ம வயது பெண்ணைத் தாக்கி பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறி, வேலையில்லா ஆடவன் போலீஸாரால் கைதுச் செய்யப்பட்டான்.
பாதிக்கப்பட்ட பெண்ணையும் உடனிருந்தவர்களையும் நெருங்கிய 23 வயது அவ்விளைஞன், அப்பெண்ணை தர தரவென தனது வீட்டுக்குள் இழுத்துள்ளான்.
முரண்டுபிடித்த பெண்ணைப் பணிய வைக்க அவன் தாக்கியதில், அப்பெண் காயமடைந்தார்.
பின்னர் எப்படியோ தப்பி வந்து போலீஸில் அவர் புகார் அளித்ததைத் தொடர்ந்து, புக்கிட் செந்தோசாவில் சந்தேக நபர் கைதானான்.
அவன் போதைப்பொருள் உட்கொண்டதும் பரிசோதனையில் தெரிய வந்தது.
எனினும் பழையக் குற்றப்பதிவுகளைக் அவன் கொண்டிருக்கவில்லை.
இந்நிலையில் விசாரணைக்காக 4 நாட்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளான்.



