Latestமலேசியா

உலு திராம் போலீஸ் நிலையத் தாக்குதலில் கொல்லப்பட்ட போலீஸ்காரர் மீது அவதூறு; இளைஞன் கைது

ஈப்போ, செப்டம்பர் -7 – மே மாதம் ஜோகூர், உலு திராம் போலீஸ் நிலையத் தாக்குதலில் கொல்லப்பட்ட போலீஸ்காரர் குறித்து முகநூலில் அவதூறாக பேசிய ஆடவன், மாசாயில் கைதாகியுள்ளான்.

Konstabel Ahmad Azza Fahmi-யின் குடும்பத்தார் செய்த போலீஸ் புகாரின் அடிப்படையில் 25 வயது அவ்விளைஞன் கைதானான்.

தொழிற்சாலை ஊழியருமான அவ்வாடவனிடமிருந்து கைப்பேசியும் பறிமுதல் செய்யப்பட்டது.

விசாரணைகளுக்காக 4 நாட்கள் அவன் தடுத்து வைக்கப்பட்டுள்ளான்.

கொல்லப்பட்ட கான்ஸ்டபிள் லஞ்சம் வாங்கியவர் என ‘Wan Qayyum’ என்ற பெயரில் முகநூல் பக்கத்தில் சந்தேக நபர் அவதூறு பரப்பியதாக நம்பப்படுகிறது.

மே 17-ஆம் தேதி உலு திராம் போலீஸ் நிலையத்தில் ஆடவன் ஒருவன் மேற்கொண்ட தாக்குதலில் 2 போலீஸ்காரர்கள் கொல்லப்பட்டு மேலும் ஒருவர் காயமடைந்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!