
கோலாலம்பூர், ஜூலை 1 – வணிக நோக்கத்திற்காக அலோங்கிடம் கடன் வாங்கி அதனை முழுமையாக செலுத்த முடியாமல் போனதால், உரிமம் இல்லாத அந்த அலோங் கும்பல், பாதிக்கப்பட்டவர் மரணமடைந்ததைப் போல புகைப்படங்களை தயார் செய்து சமூக ஊடகத்தில் பதிவேற்றம் செய்வதோடு மட்டுமல்லாமல் சம்பந்தப்பட்ட நபருக்கு அனுப்பி வைத்து அச்சுறுத்தியுள்ளனர்.
40 வயது மதிக்கத்தக்க அந்நபர் ‘இறுதிச் சடங்கில்’ வைக்கப்பட்டுள்ள தனது உருவப்படத்தைக் காட்டும் புகைப்படத்தைப் பெற்றதாகவும்
இச்சம்பவம் குறித்து MCA வில் புகார் அளித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
வெறும் 10,000 ரிங்கிட் கடன் மட்டுமே தன வாங்கியதாகவும், அதில் 6,000 ரிங்கிட்டை திருப்பி செலுத்தி விட்டதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் MCA, புகார்கள் பணியகம் மற்றும் கடன் வழங்குபவருடன் பேச்சுவார்த்தை நடத்தி பணத்தை செலுத்துவதை மீண்டும் ஏற்பாடு செய்வதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ முயற்சிக்கும் என்று அறிவித்துள்ளது.