
கோலாலம்பூர், நவ 3 – உள்நாட்டைச் சேர்ந்த பிரபல ரேப் பாடகரான
நம் வீ எனப்படும் Wee Meng Chee மீது போதைப் பொருள்
பயன்படுத்தியது மற்றும் போதைப் பொருள் வைத்திருந்ததாக
குற்றஞ்சாட்டப்பட்டது. அக்டோபர் 22 ஆம் தேதி ஹோட்டல் ஒன்றில்
நம் வீ கைது செய்யப்பட்டதாக மாநகர் போலீஸ் தலைவர் டத்தோ
பாடில் மார்சுஸ் ( Fadil Marsus) தெரிவித்தார். இரு நாட்கள் போலீசில்
தடுத்து வைக்கப்பட்டிருந்த நம் வீ மெத்தம்பெத்தமின் , கெத்தமின் உட்பட மூன்று போதைப் பொருக்ளை பயன்படுத்தியிருப்பது அவரது
சிறுநீர் பரிசோதனையில் கண்டுப்பிடிக்கப்பட்டது.
அபாயகரமான போதைப் பொருள் சட்டத்தின் 39 A (1) மற்றும் 15 (1) (a)
விதியின் கீழ் அவர் மீது இரண்டு குற்றச்சாட்டுக்கள் கொண்டுவரப்பட்டது. செக்சன் 39 A (1) விதியின் கீழ் கொண்டு வரப்பட்ட குற்றச்சாட்டு நிருபிக்கப்பட்டால் ஐந்து ஆண்டுகள்வரை சிறை மற்றும் 9 பிரம்படிகள் விதிகப்படலாம். அவருக்கு எதிரான மற்றொரு குற்றச்சாட்டு நிருபிக்கப்பட்டால் 5,000 ரிங்கிட்வரை அபராதம் மற்றும் இரண்டு ஆண்டு சிறை ஆகிய இரண்டும் விதிக்கப்படலாம். தனக்கு எதிராக இரண்டு குற்றச்சாட்டுக்களையும் நம் வீ மறுத்தார். அந்த இரு குற்றச்சாட்டுக்கும் தலா 4,000 ரிங்கிட் ஜாமின் அனுமதிக்கப்பட்டது. அவருக்கு எதிரான குற்றச்சாட்டு டிசம்பர் 18 ஆம்தேதி மீண்டும் மறுவாசிப்புக்கு செவிமடுக்கப்படும்.



