
கோலாலம்பூர், செப் 10 – அரசாங்கத்தின் யூனிட் புசாட் யுனிவர்சிட்டி (UPU) வழியாக மலாயா பல்கலைக்கழகத்தின் கணக்கியல் துறையில் இடம் பெறத் தவறிய STPM தேர்வில் சிறந்த மதிப்பெண் பெற்ற
எட்வர்ட் வோங்கிற்கு UTAR எனப்படும் துங்கு அப்துல் ரஹ்மான் பல்கலக்கழகம் மற்றும் துங்கு அப்துல் ரஹ்மான் நிர்வாகம்,தொழிற்நுட்பம் பல்கலைக் கழகத்தில் முழு உபகாரச் சம்பளத்துடன் பயில்வதற்கு வாய்ப்பு வழங்கப்படும்.
எனினும் தனது கட்சியுடன் தொடர்புடைய அந்த இரு உயர்க் கல்வி நிலையங்களின் உபகாரச் சம்பளம் எட்வர்ட் வோங்கின் அடிப்படை பிரச்னைக்கு தீர்வாக இருக்கக்கூடாது என ம.சீ. சவின் தலைவரான வீ கா சியோங்
( Wee ka Siong ) தெரிவித்தார்.
எஸ்.டி.பி.எம் தேர்வில் 4.0 CGPA மதிப்பெண்ணும், புறப்பாடங்களில்
99.9 விழுக்காடு மதிப்பெண்ணும் பெற்ற வோங், நாட்டின் தலைசிறந்த பொதுப் பல்கலைக்கழகங்களில் இடம் பெறத் தகுதியானவர் என்று நம்புவதாக Wee கூறினார்.
இது வோங்கின் அரசியலமைப்புச் சட்ட உரிமையாகும். அந்த தேர்ச்சி முடிவுகளைக் கொண்டு, நாட்டின் சிறந்த பல்கலைக்கழகத்தில் நுழைய அவர் தகுதி பெற வேண்டும் என்பதோடு அவர் ஏன் தனது உரிமைகளுக்காகப் போராடக்கூடாது?என்பதை தாம் மதிப்பதாக இன்று செய்தியாளர் கூட்டத்தில் வீ கா சியோங் தெரிவித்தார்.
வெளிநாட்டு பல்கலைக்கழகங்களிலிருந்து வோங் சலுகைகளைப் பெறக்கூடும் என்பதையும் அவர் எச்சரித்தார்.