
கோலாலம்பூர், மார்ச் 9- 2025 SPM முடிவுகள் வெளியானதைத் தொடர்ந்து UPUOnline வழியாக உயர்க் கல்வி நிலையங்களுக்கு விண்ணப்பிக்கும் எஸ்.பி.எம் முடித்த மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பக் காலம் இவ்வாண்டு ஏப்ரல் 12 ஆம் தேதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
அதே வேளையில் STPM முடித்தவர்களுக்கான விண்ணப்பபம் சமர்ப்பிப்பதற்கான கடைசி நாள் மார்ச் 23 ஆம் தேதியாகும்.
SPM தேர்ச்சி முடிவை பெற்றவர்கள் BSN வழியாக UPUOnline பின் எண்ணை 10 ரிங்கிட் 60 சென் விலையில் வாங்கி 363 கல்வித் திட்டங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
STPM தகுதி அல்லது அதற்கு சமமான கல்வி தகுதியை கொண்டவர்கள் உயர்க் கல்வி கழகங்கள்,தொழிற் கல்லூரிகள் , சமூகக் கல்லூரிகள் மற்றும் MARA நிறுவனங்கள் உட்பட 1,146 பட்டப் படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம்.
தாமதங்களை தவிர்ப்பதற்கு மாணவர்கள் முன்கூட்டியே விண்ணப்பிக்கும்படி ஊக்குவிக்கப்படுகிறார்கள்.



