ஒசாகா ஜப்பானில் குளோபல் வர்த்தக மாநாடு

கோலாலம்பூர், மார்ச்-28 – உலகத் தமிழ் வர்த்தக சங்கம் மற்றும் உலகத் தமிழ் வம்சாவளி அமைப்பு இணைந்து நடத்தும் 13 வது குளோபல் வர்த்தக மாநாடு டிசம்பர் 3 & 4 ஆம் தேதிகளில் நடைபெற உள்ளது.
கடந்த 12 ஆண்டுகளாக பல்வேறு நாடுகளில் நடைபெற்று வரும் உலகத் தமிழ் வம்சாவளி மாநாடு (குளோபல் வர்த்தக மாநாடு) இவ்வாண்டு ஜப்பானில் நடைபெற உள்ளது. இந்நிகழ்விற்கான முதற்கட்ட ஆய்விற்காக வந்துள்ள உலகத் தமிழ் வர்த்தக சங்க தலைவர் செல்வகுமார், பொதுச் செயலாளர் குமரேசன் ஆகியோர் இந்தியாவிற்கான ஜப்பான் தூதர் திருமதி நக்மா மாலிக் அவர்களை டோக்கியோவிலும், இந்தியாவிற்கான கான்சில் ஜெனரல் திரு சந்துரு அப்பரை ஒசாகாவிலும் சந்தித்து முதற்கட்ட பணி ஏற்பாடுகளை செய்தனர்.
இவ்வேளையில் ஒசாகாவில் உள்ள பல்வேறு ஜப்பானிய வர்த்தக சங்கங்கள், ஒசாகா மாநில அரசு தொழில்துறை வளர்ச்சி அதிகாரிகள் போன்றவைகளை சந்தித்து நிகழ்ச்சிக்கான முதற்கட்ட பணிகளை செய்தனர்.
இந்தியாவிற்கும் ஜப்பானிற்கும் உள்ள தடையில்லா வர்த்தக வழிகாட்டுதலின்படி நடைபெற உள்ள நிகழ்வு இரு நாட்டு சிறு குறுந் தொழில் அதிபர்கள் பயனடையும் வகையில் நடைபெற உள்ளது.
இந்நிகழ்வில் வர்த்தக கண்காட்சி, வர்த்தக கருத்தரங்கம், முதலீட்டாளர்கள் சந்திப்பு, B2B Meet போன்றவைகள் நடைபெற உள்ளன என உலகத் தமிழ் வர்த்தக சங்க தலைவர் செல்வகுமார் மற்றும் குமரேசன் தெரிவித்தனர்.
தொடர்புக்கு +60166167708



