
கங்கர் பெர்லிஸ், 26 -கங்கார் பெர்லிஸில் நேற்று மாலை 5.20 மணியளவில் வீசிய புயல் காற்றில், ஶ்ரீ கங்கார் மலாய் பள்ளியின் கூரைகள் பறந்தன.
பறந்த அந்த கூரைகள் பின்னர் அருகாமையில் நிறுத்து வைக்கப்பட்டிருந்த காரின் மீது விழுந்தன.
இது தொடர்பான காணொளி வைரலாகியுள்ள நிலையில், அப்பள்ளியின் சுமார் 207 மாணவர்கள் இன்று வீட்டிலிருந்து கல்வி பயிலவுள்ளனர்.
இதனிடையே, அக்காணொளியின் கீழ் கருத்து பதிவிட்டுள்ள ஒருவர், 109 கிலோ கிராம் எடையுள்ள தன்னையே அக்காற்று தள்ளாட வைத்ததாகவும், உண்மையிலேயே அது பலத்த புயல்தான் என்பதை உணர்ந்ததாகவும் கூறியுள்ளார்.