Latestமலேசியா

கடந்த ஆண்டு எம்.பி.எம் தேர்வில் 13,779 பேர் அனைத்து பாடங்களிலும் A பெற்றனர் 376 பேர் A+

புத்ரா ஜெயா, மார்ச் 31- 2025 ஆம் ஆண்டுக்கான SPM தேர்வு முடிவுகளில் முன்னேற்றம் காணப்பட்டுள்ளது.

இதற்கு முந்தைய ஆண்டு 4.49 ஆக இருந்த GPK எனப்படும் தேசிய மதிப்பீட்டு புள்ளியின் சராசரி இம்முறை 4.42 ஆக உயர்ந்துள்ளது. மொத்தம் 13,779 மாணவர்கள் அனைத்துப் பாடங்களிலும் A (A+, A மற்றும் A-) பெற்றனர்.

அதே சமயம், 376 பேர் அனைத்துப் பாடங்களிலும் A+ எனப்படும் சிறந்த அடைவு நிலையை பெற்றனர்.

இதற்கு முந்தைய ஆண்டைவிட கடந்த ஆண்டு எஸ்.பி.எம் தேர்வில் A+ சிறந்த அடைவு நிலை பெற்றவர்களின் எண்ணிக்கை அதிகமாகும் என கல்வித்துறையின் தலைமை இயக்குநர் முகமட் அசாம் அகமட் தெரிவித்தார்.

மேலும், அனைத்துப் பாடங்களிலும் குறைந்தபட்சம் சிறப்புத் தகுதியுடன் (C கிரேடு) தேர்ச்சி பெற்றவர்களின் எண்ணிக்கையும் இம்முறை உயர்ந்துள்ளது.

2024 ஆம் ஆண்டில் 86,040 ஆக இருந்த அந்த எண்ணிக்கை கடந்த ஆண்டு எஸ்.பி.எம் தேர்வில் 92,347 ஆக அதிகரித்துள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!