
பெய்ஜிங், நவம்பர்-20 – சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் உள்ள அருங்காட்சியகம் ஒன்று, வித்தியாசமானகாப்பி வகையால் கவனம் ஈர்த்துள்ளது…ஆம் அது தான் கரப்பான் பூச்சி காப்பி..
சுமார் US$6 டாலர் மதிப்பில் விற்கப்படும் இந்த காப்பி, அரைத்தகரப்பான் பூச்சி மற்றும் உலர்ந்த மஞ்சள் உணவுப் புழுக்களுடன் தயாரிக்கப்படுகிறது.
அனைத்து பொருட்களும் சீன பாரம்பரிய மருத்துவக் கடைகளில் இருந்துபெறப்பட்டவை என அருங்காட்சியகம் உத்தரவாதமும் தருகிறது.
இரத்த ஓட்டத்தை சீராக்கி நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துவதாகவும் அது சான்றிதழ் கொடுக்கிறது.
ஜூன் மாதம் அறிமுகமான இந்த பானம், சமூக வலைதளங்களில் வைரலாகி, புதுமை கலந்த சாகசத்தை விரும்பும் இளைஞர்களை அதிகம் கவர்ந்துள்ளது.
தினமும் 10 கப் காப்பி விற்பனையாகிறதாம்.
அதனைக் குடிப்பவர்கள் ருசியை அறிந்துகொள்பவர்கள் தொடங்கி அருவருப்பு அடைபவர்கள் என பட்டியல் நீளுகிறது.
மேலும், பிட்சர் செடியின் ஜீரண சாறு கலந்த காப்பி மற்றும் Halloween-னுக்காக செய்யப்பட்ட எறும்பு காப்பி போன்ற வித்தியாசமான பானங்களும் சிறப்பு இணைப்பாக வழங்கப்படுகின்றன.



