
காஜாங், ஜனவரி-3 – சிலாங்கூர் காஜாங்கில் ஏற்பட்ட ஹீலியம் எரிவாயு தோம்பு வெடிப்பில், 3 வாகனங்கள் சேதமடைந்துள்ளன.
இச்சம்பவம், காஜாங் சுங்கை ராமால் பகுதியில் உள்ள ஓர் உணவகங்காடி நிலையத்தில் நேற்று மதியம் நிகழ்ந்தது.
உணவுக் கடைகளில் பயன்படுத்தப்பட்டதாக நம்பப்படும் ஒரு எரிவாயு சிலிண்டர் வெடித்ததாலேயே இந்த விபத்து ஏற்பட்டதாக தொடக்கக் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
வெடிப்புக் காரணமாக அருகில் நிறுத்தப்பட்ட 3 கார்கள் மற்றும் 2 கடைகள் சேதமடைந்தன.
இருப்பினும், யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
இச்சம்பவத்தில் குற்றச்செயல் எதுவும் இல்லை எனக் கூறிய போலீஸார், வெடிப்புக்கான காரணம் குறித்து விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாக தெரிவித்தனர்.



