Latestமலேசியா

காராக்கில் 24 வயது திவாகரன் காணவில்லை; 2 வாரங்களில் இரண்டாவது சம்பவம்

பெந்தோங், நவ 21 – நவம்பர் 17 ஆம் தேதி முதல் கராக் , கம்போங் பாருவிலுள்ள தனது வீட்டிற்கு வரத்தவறிய 24 வயதுடைய இளைஞர் P. திவாகரன் ( Thivagaran ) காணவில்லையென அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2 வாரங்களில் பெந்தோங் மாவட்டத்தில் காணாமல்போன இரண்டாவது நபர் அவராவார். நேற்று மதியம் காணாமல்போனவர் தொடர்பான போலீஸ் புகார் பெறப்பட்டதாக மாவட்ட போலீஸ் தலைவர் Superintendent ஷைய்ஹாம் முகமட் கஹார் ( Zaiham Mohd Kahar ) தெரிவித்தார்.

ஆகக் கடைசியாக நவம்பர் 17 ஆம்தேதி Sertikக்கிலுள்ள தோட்டத்திற்கு திவாகரன் வேலைக்கு சென்றதை பார்த்ததாகவும் அதன் பிறகு அவர் வீட்டிற்கு திரும்பவில்லையென திவாகரனின் இளைய சகோதரர் போலீசில் புகார் செய்துள்ளார்.

184மீட்டர் உயரம் மற்றும் 75 கிலோ எடை கொண்ட அவர் கடைசியாக கருப்பு நிற
டீ சட்டை மற்றும் கருப்பு அரைக்கால் சிலுவார் அணிந்திருந்தார் என இன்று வெளியிட்ட அறிக்கையில் ( Zaiham ) தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!